மு.க.ஸ்டாலினை உடல்மொழியால் கேலி செய்தேனா? முதல்வர் விஜய் விளக்கம்
cm vijay clarified his body language not intention about m.k.stalin: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசிய போது, அவரது சைகை முகஸ்டாலினை கேலி செய்வதாக எதிர்ப்பு எழுந்த நிலையில், அது குறித்து முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.
உடல்மொழிக்கு முதல்வர் விஜய் விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கைக்கான பதிலுரையில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து பேசினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி பேசும் போது எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவர்கள் என திமுகவினர் பேசுகின்றனரே அந்த வரலாறு என்னன்னு எல்லாருக்கும் தெரியும் எனக்கூறும் போது தாடையில் கை வைத்து ஒரு சைகை செய்தார்.
மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டதாக பல மேடைகளிலும் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் இந்த சைகை மு.க.ஸ்டாலினை கேலி செய்வதாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகமும் முதல்வர் விஜய்க்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய போது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது அது உள்நோக்கம் கொண்டதில்லை என முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…
— TVK Vijay (@TVKVijayHQ) September 8, 2026
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் உடல் மொழி தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் விளக்கம் அளித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |