சமையல் துறைக்கு பேரிழப்பு: செஃப் தாமுவிற்கு முதல்வர் விஜய் இரங்கல்
Chief minister vijay condolence for chef damu: பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் மறைவிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் காலமான பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவிற்கு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செஃப் தாமு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹொட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதில் சாதனை படைத்தவர் செஃப் கே.தாமோதரன் என்கிற தாமு.
இவர், தனியார் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டதின் மூலம் மிகவும் பிரபலமான நபராக மாறினார்.
617 வகையான உணவுகளை தயாரித்ததன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்த செஃப் தாமு, உடல்நலக்குறைவினால் 72 வயதில் காலமானார்.
அவரது மறைவிற்கு பலரும் வருத்தத்தை பதிவு செய்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் இரங்கல்
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
2010ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.
அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 25, 2026
