எம்.ஜி.ஆர் வழியில் முதல்வர் விஜய் - கோவிலுக்கு 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை
கர்நாடக மாநிலமூகாம்பிகை கோவிலுக்கு சென்ற முதல்வர் விஜய், 1.6 கிலோ வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய்
3 நாட்கள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஜனாதிபதி, மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்ததோடு, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, டெல்லியில் இருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவில் மரபுப்படி சட்டையை கழற்றிவிட்டு, சிவப்பு நிற சால்வையை உடல் மீது போர்த்தியபடி முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
வெள்ளி வாள் காணிக்கை
அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. 1 கிலோ 600 கிராம் எடையிலான, 2.5 அடி நீளமுள்ள வெள்ளி வாளை, விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

1984 ஆம் ஆண்டு இதே கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்த எம்.ஜி.ஆர், தங்க வாளை காணிக்கையாக வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு சென்று சண்டிகா யாகம் நடத்தியதுடன், எம்.ஜி.ஆர் வழங்கிய தங்க வாளைத் தனது கைகளில் ஏந்தி வழிபாடு செய்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |