வாக்கு சேகரிப்பின் போது ட்ராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய்
cm vijay drives tractor in madurantakam campaign: மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்க சாலை வலம் சென்ற போது முதல்வர் விஜய் ட்ராக்டர் ஓட்டினார்.
ட்ராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய்
மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணி முதல், மதுராந்தகத்தில் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் செல்லும் வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். மேலும், பொம்மைகள், நெற்கதிர்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
இதனையடுத்து, ஒரு வீட்டில் அமர்ந்துதேநீர் அருந்தியபடி அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். சாலையோரம் காத்திருந்த மாற்று திறனாளிகளிடம் இறங்கி சென்று, அவர்களின் குறைகளை கேட்டுவிட்டு, வாக்கு சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து, விவசாய நிலத்தில் இறங்கி ட்ராக்டர் ஒட்டினார். அங்கிருந்த மக்களுடன் புகைப்படம் எடுத்ததுடன் அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.