லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயம்: கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
CM Vijay Flags Off London Ajith Car Race: லண்டனில் நடிகர் அஜித் குமார் கலந்து கொள்ளும் கார் பந்தய போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
முதலமைச்சரின் லண்டன் பயணம்
வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார்.
தமிழகத்தில் சர்வதேச தளத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து இருந்த நிலையில், லண்டனில் உள்ள சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளை முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார்.
Proud Moment of TAMILNADU People's 💪
— BOSS TVK ❤️💛❤️ (@BossTVK) September 12, 2026
Our honorable CM Vijay flagged off the car race.
all the best Thala @Akracingoffl 👍#CMJosephVijay #CMVijay #Ajith pic.twitter.com/V0b141uzDs
கொடியசைத்து தொடங்கி வைத்த விஜய்
இந்நிலையில் மிச்செலின் லீ மான்ஸில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய போட்டியை பச்சைக் கொடி அசைத்து முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இதில் LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்ப்பில் 16ம் எண் கொண்ட Ligier என்ற பந்தயக் காரை நடிகர் அஜித்குமார் இயக்குகிறார்.
நடிகர் அஜித் குமாரின் இணை கார் ஓட்டுநராக பிரான்ஸ் நாட்டின் முன்னணி கார் பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் பங்கேற்கிறார்.
SWAG PRO MAx
— Suresh Elangovan (@sureshelangov12) September 12, 2026
AK-VJ pic.twitter.com/tKLYvwNRvI
முதல்வர் விஜயின் வருகை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அஜித்குமார், கடந்த 34 ஆண்டுகளாக திரையுலகில் தன்னுடைய நண்பராக பயணித்த முதல்வர் விஜய், தன்னுடைய பிஸியான நேரத்திலும் எங்களை ஊக்குவிப்பதற்காக சில்வர்ஸ்டோன் வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
மேலும் தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது நடிகர் அஜித்குமாரின் காரில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் போட்டோவுக்கு போஸ் குடுத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |