புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு
cm vijay inspection in puzhal jail: முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வப்போது மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை புழலில் உள்ள மத்திய சிறைக்கு சிறைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
சிறையில் கைதிகள் இருந்த பகுதிக்கு சென்ற முதல்வர் விஜய் அங்குள்ள சிறைவாசிகளிடம் நன்றாக கவனித்து கொள்கிறார்களா? என்ன குறைகள் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், சிறைத்துறை அதிகாரிகளிடம் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று ஆய்வு நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து புழலில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அங்கும் ஆய்வு நடத்தியுள்ளார்.
சாலையில் நடந்து சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்த மக்களை பார்த்து கையசைத்த நிலையில், முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் ஆரவாரமடைந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |