இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.., 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்லும் விஜய், 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குகிறார்.
கரூர் செல்லும் முதல்வர் விஜய்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்கிறார் விஜய்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூர் செல்லும் விஜய், சென்னை இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கரூர் செல்கிறார்.

நண்பகல் 12 மணியளவில் வெண்ணமலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக 5,000 பேருக்கு மட்டும் QR கோடு கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணி
நிகழ்ச்சிக்கு முன், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
பின்னர் மக்கள் சந்திப்பை முடித்துவிட்டு கரூர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

மாலை 3 மணியளவில் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்ற 32 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்குகிறார்.