பிரித்தானியாவில் அஜித் பங்குபெறும் கார் பந்தயம் - முதல்வர் விஜய் நேரில் பார்க்க வாய்ப்பு
cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பார்க்க வாய்ப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி அரசுமுறை பயணமாக பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார்.

அவருடன் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் பிரதானியாவிற்கு செல்ல உள்ளது.
செப்டம்பர் 16 ஆம் திகதி வரை பிரித்தானியாவில் இருக்க உள்ள முதல்வர் விஜய், தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ளும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் உள்ள Silverstone Circuit ல் வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது.

இதில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேசிங் அணியின் பங்குபெற உள்ளது. இதற்காக அஜித்குமார் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டா முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் எனவும், ஃபார்முலா உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ பயணத்திட்டத்தில் இந்த நிகழ்வு இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரித்தானிய பயணம் தள்ளிப்போகவும் வாய்ப்பு
அதேவேளையில் , முதல்வர் விஜய்யின் பிரித்தானிய பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார்.

13 ஆம் திகதி மாநாடு முடிந்த பின்னர் அவர் சென்னை வந்து முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மலேசிய பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால், பிரித்தானிய பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆளுநர் அர்லேகர் முதல்வர் விஜய்யை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் பிரித்தானியா சென்று அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பாரா அல்லது பயணம் ஒத்திவைக்கப்படும் என்பது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |