தோனிக்கு சொந்தமான இடத்தில் முதல்வர் விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு
cm vijay met rahul gandhi at ms dhoni cafe in chennai: சென்னையில் தோனிக்கு சொந்தமான cafeயில் முதலமைச்சர் விஜய்யும் ராகுல் காந்தியும் ஒன்றாக அமர்ந்து காபி அருந்தினர்.
முதல்வர் விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு
காங்கிரஸ் கட்சி சார்பாக சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெற உள்ள மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மக்களைவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

சென்னைக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் காரில் முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, முதல்வர் விஜய் ராகுல் காந்திக்கு மதிய விருந்து அளித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் இருவரும் சென்னை பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு சொந்தமான 7Padel cafeயில் முதலமைச்சர் விஜய்யும் ராகுல் காந்தியும் ஒன்றாக அமர்ந்து காபி அருந்தினர்..