பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
நோர்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா உடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.
பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற 14வது நோர்வே சர்வதேச செஸ் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம், நோர்வே செஸ் சாம்பியனான பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை 20 வயதான பிரக்ஞானந்தா படைத்தார்.

பிரக்ஞானந்தாவிற்கு இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, இன்று சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின் போது முதல்வர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் செஸ் விளையாடினர்.

இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதும், முதல்வர் விஜய் மற்றும் அருகில் இருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
— Actor Vijay Fans (@Actor_Vijay) June 8, 2026
pic.twitter.com/mPhXygdgG4
இதனையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரக்ஞானந்தா, "சி.எம் சார் நான் வரும்போது செஸ்போர்டை எடுத்து வர சொல்லி என்னுடன் செஸ் விளையாடினார்கள். 15 நிமிடங்கள் விளையாடினோம். முதல்வர் இப்படி செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |