முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு
தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி சங்கீதா, தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், தனது கணவருக்கு திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இந்த வழக்கு ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்டநிலையில், இன்று 3வது முறையாக விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பினரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக காணொளி வாயிலாக ஆஜராகுவதாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுஜாதா வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
மேலும், வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்து சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி சுஜாதா, மனுதாரர், எதிர் மனுதாரரின் மின்னஞ்சல் முகவரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |