தமிழின் இனிமை தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும்- முதல்வர் விஜய் தமிழ்நாடு தின வாழ்த்து
மெட்ராஸ் மாகாணமாக இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றக் கோரி, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 1967 ஜூலை 18 அன்று சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாள் தமிழ்நாடு தினமாக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 18, 2026
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர்…
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |