தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய்
cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிட்டப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 16 ஆம் திகதி வரை முதல்வர் விஜய் பிரித்தானியாவில் இருந்து, தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு, வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தைவானில் நடைபெற உள்ள செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சிப் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாட்டில் கலந்து கொண்டு முதலீடுகளை ஈர்க்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |