கேரளாவின் இன்னொரு கோடீஸ்வரர்... இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தொடர்பு: அவரது தற்போதைய சொத்து மதிப்பு
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ 595,000 கோடி என்று கூறப்படும் நிலையில், அதன் நிறுவனர்களில் ஒருவரான ஷிபுலால் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சில மென்பொருள் நிபுணர்கள்
இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கும் போது நாராயண மூர்த்திக்கு பக்கபலமாக இந்தியாவின் தலைசிறந்த சில மென்பொருள் நிபுணர்கள் உடனிருந்தனர். அதில் ஒருவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஷிபுலால்.
இவரது தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர் மற்றும் இவரது தாயார் ஒரு அரசு ஊழியர். ஷிபுலால், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
1979ல் Patni நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக ஷிபுலால் இணைந்துள்ளார். இங்கேயே நாராயண மூர்த்தியின் அறிமுகம் கிடைத்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கிய பின்னர் சுமார் 10 ஆண்டு காலம் ஷிபுலால் அந்த நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் 5 வருட விடுப்பு எடுத்துக் கொண்டு ஷிபுலால் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 1977ல் மீண்டும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு திரும்பியுள்ளார் ஷிபுலால்.
தற்போதைய சொத்து மதிப்பு ரூ 15,006 கோடி
2011 - 2014 வரை இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். 2012- 2013ல் ஷிபுலாலின் சம்பளம் என்பது ரூ 36 லட்சம் என்றே இருந்துள்ளது.
ஆனால் அடிப்படை சம்பளம் மற்றும் நிறுவனத்தின் சலுகைகள் உட்பட ஆண்டுக்கு ரூ 65 லட்சம் தனியாக பெற்றுக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, ரூ 595,000 கோடி நிறுவனத்தில் அவருக்கும் உரிமை உள்ளது.
அந்தவகையில் ஷிபுலாலின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 15,006 கோடி என்றே கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ் வருவாய் மட்டுமின்றி, ஷிபுலாலுக்கு சொந்தமாக வேறு சில நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |