நண்பருடன் இணைந்து உருவாக்கிய ரூ 251,900 கோடி நிறுவனம்... 10 ஆண்டுகளுக்கு பிறகு எடுத்த அந்த முடிவு
Zomato நிறுவனத்தின் இணை நிறுவனர் பங்கஜ் சத்தா, தங்களின் நிறுவனத்தின் மீதான ஆர்வம் குறைந்ததை அடுத்து அதில் இருந்து வெளியேறினார்.
ஒரு புது முயற்சி
2008 ஆம் ஆண்டு பங்கஜ் மற்றும் தீபிந்தர் கோயல் ஆகியோர் Zomato-வை நிறுவியபோது, ஒரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், தற்போதைய உணவு விநியோகம் மற்றும் உணவுக்கான தேடலையும் மொத்தமாக மாற்றினர்.
ஐ.ஐ.டி டெல்லியில் பொறியியல் பட்டம் பெற்ற சத்தா 2008ல் Bain & Co நிறுவனத்தில் தம்முடன் பணியாற்றி வந்த நண்பர் தீபிந்தர் கோயலுடன் இணைந்து வேலையை விட்டுவிட்டு அதுவரை இந்தியாவில் கவனிக்கப்படாத ஒரு புது முயற்சியுடன் களமிறங்கினர்.
தொடக்கத்தில் FoodieBay என அறியப்பட்டு பின்னர் 2010ல் Zomato என உருமாற்றம் பெற்றது. ஆனால் தற்போது Eternal என பெயர் மாற்றம் பெற உள்ளது.
சத்தாவின் வழிகாட்டுதலின் கீழ், ஒன்லைன் ஆர்டர் செய்தல், டேபிள் முன்பதிவுகள், உணவு விநியோகம் மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக Zomato அதன் சேவைகளை பன்முகப்படுத்தியது.
மட்டுமின்றி, முக்கியமான வளர்ச்சிப் பகுதிகளைக் கண்டறிந்து, செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், உணவு தொடர்பான அனைத்திற்கும் ஒரு விரிவான தளமாக Zomato மாறுவதற்கு சத்தா உதவினார்.
பெரும் கோடீஸ்வரர்
அத்துடன் முதலீட்டாளர்கள் மற்றும் உணவக பங்குதாரர்களுடன் நீடித்த தொடர்புகளை வளர்ப்பதற்கும் சத்தா காரணமானார். பிப்ரவரி 2018ல் Zomato ஒரு யூனிகார்னாக மாறியிருந்தாலும் கூட, சத்தாவால் ஆர்வமுடன் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
அதுவே அவரை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டியெழுப்ப உதவிய அமைப்பை விட்டு வெளியேற வழிவகுத்தது. ஆனால் சத்தா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். 2019 மே மாதம் Pooja Khanna என்பவருடன் இணைந்து Mindhouse என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
2022ல் இந்த நிறுவனம் Shyft என பெயர் மாற்றம் கண்டது. சத்தாவின் கதை விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை பதிவு செய்துள்ளது. 2024ல் Zomato நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் சுமார் 190 சதவிகிதம் உயர்ந்து ரூ 251,900 கோடி என உயர்ந்தது.
41 வயதான தீபிந்தர் கோயல் பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை எட்டினார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 15,284 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |