அவசரநிலையில் தரையிறக்கப்பட்ட விமானம்... பாராசூட் இன்றி நடுவானிலிருந்து கீழே குதித்த துணை விமானி
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் சிறிய ரக விமானம் அவசரநிலையில் தரையிறக்கப்பட்ட போது அதன் துணை விமானி பாராசூட் எதுவும் இன்றி விமானத்தில் இருந்து வெளியேறி உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட CASA CN-212 என்ற சிறிய ரக விமானம் ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்தின் புல்வெளியில் அவசரகால நிலையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து அதன் விமானி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் விமானத்தின் துணை விமானி விமானம் தரையிறக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 48 கிமீ இடைவெளியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
நடுவானில் விமானத்திலிருந்து வெளியேறிய துணை விமானி 23 வயதான சார்லஸ் ஹெவ் க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஓடுபாதையில் விமானம் மோதிய போது துணை விமானி எதற்காக காக்பிட்டில் இல்லை என பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர் எனவும், 23 வயதான க்ரூக்ஸ் பாராசூட் அணியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் க்ரூக்ஸ் விமானத்தில் இருந்து குதித்தாரா அல்லது அதில் இருந்து விழுந்தாரா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
வேக் கவுண்டி அவசரகால நிர்வாகத்தின் செயல்பாட்டு மேலாளர் தர்ஷன் படேல், விபத்துக்கு முன் விமானத்தின் வலது சக்கரத்தை இழந்ததால் விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தினேஷ் கார்த்திக் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது...பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பரபரப்பு கருத்து!
மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய இரண்டும் இப்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.