தோனி கஷ்டப்படுகிறார், அந்த இடத்தில் காயம் இருக்கு! பயிற்சியாளர் ஃபிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு அந்த இடத்தில் காயம் இருப்பதாக பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சிஎஸ்கே அணி தோல்வி
ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் துப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சென்னை அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 172 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
தோனி காயம் குறித்து பேசிய ஃபிளெமிங்
இந்நிலையில், தோனியின் காயம் குறித்து ஃபிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
'முழங்கால் காயத்திற்கு தோனி சிகிச்சைப் பெற்று வருகிறார். அதனால் ஆட்டத்தில் அவரால் சில நகர்வுகளை செய்ய இயலவில்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழிநடத்துவார். போட்டியில் விளையாடுவதற்கான உடல் தகுதியை அவர் கொண்டிருக்கிறார்' என்றார்.
@IPL