திருடி விற்கப்பட்ட கோகோ கோலா ரகசிய சூத்திரம்... பின்னர் நடந்த நம்ப முடியாத சம்பவம்
கோகோ கோலா பானத்தை எப்போது சுவைக்க நேர்ந்தாலும், அந்த பானத்தை இவ்வளவு தனித்துவமாக்கும் ரகசிய சூத்திரம் என்ன என்று பலரும் யோசித்திருக்கலாம்.
திவாலாக்கும் நிலைக்கு
கோகோ கோலா பானம் தயாரிக்க ஒரு ரகசிய சூத்திரம் உள்ளது, அது மிகவும் ரகசியமானது, அது அட்லாண்டாவில் உள்ள கோக் நிறுவனத் தலைமையகத்தில் உள்ள ஒரு ரகசிய பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
உலகிலேயே இரண்டு பேருக்கு மட்டுமே அந்த சூத்திரம் தெரியும். கோக் நிறுவனத்திற்கே பேரிடியாக விலைமதிப்பற்ற அந்த சூத்திரம் கசிந்து, 2006 ஆம் ஆண்டில் போட்டியாளரான இன்னொரு குளிர்பான உற்பத்தி நிறுவனமான பெப்சிகோவிடம் 1.5 மில்லியன் டொலருக்கு ஒப்படைக்கப்படவிருந்தது.
அந்த ஒற்றை சம்பவம் குளிர்பானத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கி, கோக் நிறுவனத்தை கிட்டத்தட்ட திவாலாக்கும் நிலைக்கு கொண்டுச்சென்றது. கோக் நிறுவனத்தின் குளோபல் பிராண்ட் இயக்குநரின் உதவியாளரான ஜோயா வில்லியம்ஸ், மிகவும் ரகசியமாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசியக் கோப்பை அணுகும் உரிமையைப் பெற்றிருந்தார்.
அவருக்கு ஏற்பட்ட ஒரு தடுமாற்றம், இரவோரு இரவாக கோடீஸ்வரராக வேண்டும் என்ற பேராசை அந்த ரகசிய சூத்திரத்தை கைப்பற்றி பெப்சிகோவிடம் விற்க திட்டமிட்டார்.
அதன்படி அவர் செயல்படத் தொடங்கினார். அவருடன் இப்ராஹிம் டிம்சன் மற்றும் எட்மண்ட் டுஹானி ஆகிய இருவரும் இணைந்து மூவருமாக பெப்சிகோ நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதினர்.
பொறாமை இருக்காது
சூத்திரத்தை ஒப்படைக்க தயார் என்றும் பெருந்தொகை அதற்கு ஈடாக வேண்டும் என்றும் கோரினர். ஆனால் தொழில் சுத்தம் என்பதை நிரூபித்த பெப்சிகோ நடந்த சம்பவத்தை கோக் நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியது.
அத்துடன், இரு நிறுவனமும் இணைந்து அமெரிக்க புலன் விசாரணை அமைப்பிடம் புகாரும் அளித்தது. இந்த சம்பவம் வில்லியம் உட்பட அந்த மூவரும் அறிந்திருக்கவில்லை. விசாரணை அதிகாரி ஒருவர் பெப்சிகோ நிர்வாகி என குறிப்பிட்டு, அந்த சூத்திரத்தை 32,000 டொலருக்கு பேரம் பேசி வைப்பற்றினார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜோயா வில்லியம்ஸ் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்ததுடன் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இவருடன் இணைந்து செயல்பட்ட இப்ராஹிம் டிம்சனுக்கு 5 ஆண்டுகளும் எட்மண்ட் டுஹானிக்கு 2 ஆண்டுகளும் தண்டனை கிடைத்தது. போட்டி இருக்கும் ஆனால் கண்டிப்பாக பொறாமை இருக்காது என்றே பெப்சிகோ அப்போது குறிப்பிட்டது.
இன்று கோக் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 307 பில்லியன் டொலர், பெப்சிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 211 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |