இந்தியாவில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் கொக்கோகோலா., எதற்காக தெரியுமா?
குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமான Coca-Cola இந்தியாவில் மதுபான சந்தையில் நுழைந்துள்ளது.
உலகளவில் பல ஆண்டுகளாக பிரபலமாக இருக்கும் குளிர்பான நிறுவனமான கோகோ கோலா (Coca-Cola), இந்தியாவில் முதல் முறையாக மதுபானப் பிரிவில் நுழைந்தது.
Coca-Cola தனது லிக்கர் பிராண்டான லெமன் டூவை (Lemon-Dou whiskey) விஸ்கி சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இந்த விஸ்கி பிராண்டு இந்தியாவில் எங்கு விற்கப்படுகிறது? இதன் விலை மற்றும் பிற விவரங்களைப் பார்ப்போம்.
மது எங்கே விற்கப்படுகிறது?
கோவா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தற்போது கோகோ கோலா நிறுவனத்தின் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 250 மில்லி லிற்றர் கேனின் விலை ரூ.230.
மதுபான பிரிவில் முதல்முறையாக நாட்டில் மதுபானங்களை விற்கும் முடிவை Coca-Cola India உறுதி செய்துள்ளது. Lemon-Douவின் பைலட் சோதனை நடைபெற்று வருவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே உலகின் பல சந்தைகளில் கிடைக்கிறது.
Lemon-Dou என்றால் என்ன?
Lemon-Dou என்பது ஒரு வகையான ஆல்கஹால் கலவையாகும். இது chuhai-லிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஓட்கா, பிராந்தி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுவதாக கோகோ கோலா இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
மதுபானச் சந்தையின் மீது பார்வையை திருப்பிய குளிர்பான நிறுவனங்கள்
குளிர்பான சந்தையை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, உலக புகழ்பெற்ற நிறுவனங்களான Coke மற்றும் Pepsi இப்போது மதுபானப் பிரிவின் மீது தங்கள் பார்வையை திரும்பியுள்ள. இரண்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த சந்தையில் நுழைந்தன.
Coke முன்பு லெமன் டூ தயாரிப்பை ஜப்பானிலும் அறிமுகப்படுத்தியது. PepsiCo அமெரிக்க சந்தையில் Mountain Dewவின் ஆல்கஹால் வகையை வெளியிட்டது.
குஜராத்தில் ரூ.3300 கோடி முதலீடு
சமீபத்தில் கோகோ கோலா ரூ. 3300 கோடி (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) முதலீட்டில் குஜராத் மாநிலம் Sanand நகரத்தில் மதுபான ஆலையை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Coca-Cola, Coca Cola India, Cooldrinks in India