சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 73 வயது ஜேர்மானிய பயணியை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
São Paulo-ல் இருந்து சூரிச் வழியாக ஆம்ஸ்டர்டாம் செல்லவிருந்த குறித்த பயணி, சூரிச் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
அவரிடம் இருந்து 4 கிலோ அளவுக்கு கோகோயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்மணி போதை மருந்து பொட்டலங்களை எடுத்துச் செல்லும் ஒரு கருவியாகவே இருந்துள்ளார் எனவும், அவருக்கு மேலதிக தொடர்பு உள்ளதா என்பதை விசாரணைக்கு பிறகு தெரியவரும் என சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.