கரப்பான் பூச்சி தலையில்லாமல் பத்து நாட்கள் வாழும் என்பது உண்மையா?
கரப்பான் பூச்சிகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை உலகின் சில இடங்களில் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் (Fossils ) கண்டுபிடிக்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உலகெங்கிலும் 4000 வகையான கரப்பான் பூச்சிகள் வசிக்கின்றன.
தலை இல்லாமல் ஒரு கரப்பான் பூச்சி அதிக பட்சம் ஒரு வாரம் வரை உயிர் வாழும் என்று பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் இதன் நரம்பு மண்டலம் மிக எளிமையானது உடல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதை கட்டு படுத்தும் நரம்பணுத்திரள்கள் (Neurons )உள்ளன அவை அதன் வழியே சுவாசித்து உயிர் வாழ்ந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாமல் ஒரு வாரத்தில் நீரிழப்பால் இறந்துவிடும்.
கரப்பான் பூச்சிகள் தேவை பட்டால் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை இருக்கமுடியும் மேலும் இவைகளால் தண்ணீருக்கடியில் 30 நிமிடங்கள் வரை உயிர் வாழும் என அறியவில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை சில மாதங்கள் முதல் அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.