Superfood பட்டியலில் கரப்பான் பூச்சி பால்
அனைவரின் வீட்டிலும் கரப்பான் பூச்சிகள் இருந்து நோய்களை பரப்புகிறது என்று நம்பப்படுகிறது.
உலகில் இருக்கும் 4500 கரப்பான் இனங்களில் 1% தான் நம்முடன் வாழ்கின்றன. மற்றவை அடர்ந்த காடுகளில் இயற்கையின் மறு சுழற்சிக்கு உதவிக்கொண்டிருக்கின்றன.
டிப்ளோப்டெரா பங்க்டேட்டா (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப் பால், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிக சத்தானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கரப்பான் பூச்சிப் பாலில் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இந்தப் பாலில் புரதங்கள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்துள்ளன.
இது ஒட்டுமொத்த பூமியிலேயே மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களில் ஒன்றாக அமைகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பாலூட்டிகளின் பாலில் அதிக கலோரிகள் கொண்டதாக எருமைப் பாலே இருந்தது. எருமைப் பாலில் உள்ளதை விட மூன்று மடங்கு கலோரிகள் கரப்பான் பூச்சி பாலில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், கரப்பான் பூச்சி பாலில் செல் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்கு உதவும் ஒரு டன் புரதங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான சர்க்கரைகளும் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கரப்பான் பூச்சி பாலின் உற்பத்தி குறைவாக உள்ளதால் இது இன்னும் மனித நுகர்வுக்கு கிடைக்கவில்லை.
கரப்பான் பூச்சிகளின் மூளைக்குள் சுரக்கும் ஒரு வகை ரசாயனம் தீமை செய்யும் பாக்டீரியாக்களான E.coli மற்றும் Methicillin-resistant Staphylococcus aureus(MRSA) போன்றவற்றை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது.
அதனால் ஆன்டிபயாடிக் (antibiotic) உருவாக்கத்தில் இந்தத் திரவம் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் Diploptera punctate வகை கரப்பான்களின் உடலிலிருக்கும் Lili-Mip என்ற புரதம், தாய்ப்பாலில் இருக்கும் புரதத்துக்கு இணையாக நுண்சத்துக்களைப் பெற்றுள்ளது.
வருங்காலத்தின் superfood பட்டியலில் கரப்பான் பூச்சி பால் கட்டாயம் இடம்பெறும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சமீபமாக சீன விவசாயிகள் கரப்பான் வளர்ப்பை அதிக முதலீட்டில் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பண்ணைகளில் அறுவடை செய்யப்படும் கரப்பான் பூச்சிகளைப் பெரும் தொகை கொடுத்து வாங்குகின்றனர் சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.
அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும், பாரம்பர்ய சீன மருத்துவத்திலும் கரப்பான்கள் பயன்படுத்தப்படுவதால், கரப்பான் பூச்சிகளுக்கான தேவை சீனாவில் அதிகரித்துள்ளது.
கரப்பான் பற்றிய உண்மைகள்
தலை துண்டிக்கப்பட்ட கரப்பானால் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் வாழ முடியும், தலையில்லாத கரப்பான் பட்டினியால் மட்டுமே உயிர் விடும்.
ஒரு கரப்பானால் 40 நிமிடங்கள் மூச்சை அடக்கிக்கொள்ள முடியும், அதேசமயம் ஒரு மனிதனால் 30 வினாடிகள் மட்டுமே மூச்சை அடக்க முடியும்.
மேலும், கரப்பான் ஒரு நொடிக்கு 80 செ.மீ., வேகத்தில் ஓடும், இது சிறுத்தையை விட ஐந்து மடங்கு அதிக வேகம் என்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் ஆஸ்திரேலிய தினத்தில் கரப்பான்பூச்சி பந்தயம் நடத்தப்படும்.
New Orleans மாகாணத்தில் கரப்பான் பூச்சி தேநீர், tetanus நோயைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
கரப்பான் பூச்சிகள் குறித்து பயம் கொண்டவர்களை katsaridaphobes என்றழைக்கிறார்கள்.
கரப்பான் பூச்சிகள் மனிதர்களைத் தொட்டுவிட்டால், உடனே தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் என்று மெக்சிகோவில் நம்பப்படுகிறது.
செல்லப்பிராணிகளைப் பழக்குவது போல கரப்பான்பூச்சிகளையும் பழக்க முடியும் என்கிறது ஆய்வு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |