இனி சொக்லேட்களை சொக்லேட் என்றே அழைக்க முடியாது... ஒரு சுவாரஸ்ய தகவலும்
சொக்லேட் என்னும் ஒரு இனிப்பை வாங்கி உண்ணும்போது, அதில் சொக்லேட்டில் பயன்படுத்தப்படும் கொக்கோவே இல்லை, அதற்கு பதிலாக அரிசிதான் உள்ளது என்றால் எப்படி உணர்வோம்?
அப்படி ஒரு நிலை உண்மையாகவே உருவாகிக்கொண்டிருக்கிறது!
சொக்லேட்களை சொக்லேட் என்றே அழைக்க முடியாது...
பிரித்தானியாவின், McVitie’s நிறுவனத் தயாரிப்பான Penguin and Club bars, KitKat White மற்றும் McVitie’s White Digestives ஆகிய சொக்லேட்களை இனி சொக்லேட் என்றே அழைக்கமுடியாது.

காரணம், அவற்றில் சொக்லேட்டின் அடிப்படையான கொக்கோ போதுமான அளவில் இல்லை!
பருவநிலை மாற்றமும், காடுகள் அழிப்பும் கொக்கோ தயாரிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், கொக்கோ கிடைப்பதில் பிரச்சினையும், விலை அதிகரிப்பும் உருவாகியுள்ளது.
ஆனால், சொக்லேட் சாப்பிட்டு பழகியவர்களால் சொக்லேட்டை விடமுடியுமா? ஆக, மக்களின் சொக்லேட் ஆர்வத்திற்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, பிரித்தானிய நிறுவனம் ஒன்று சொக்லேட்களில் கொக்கோவுக்கு பதிலாக அரிசியை பயன்படுத்தத் துவங்கியுள்ளது. அந்த நிறுவனம், McVitie’s.

அதேபோல, Win-Win என்னும் சொக்லேட் தயாரிப்பு நிறுவனம், கொக்கோவுக்கு மாற்றாக, அரிசி மற்றும் நொதிக்கவைக்கப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி சொக்லேட் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
விடயம் என்னவென்றால், சொக்லேட்டுக்கு புகழ் பெற்ற சுவிட்சர்லாந்திலேயே, கொக்கோவுக்கு மாற்றுப்பொருட்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்களுடன் கைகோர்த்துள்ளன சில சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள்.
Barry Callebaut என்னும் நிறுவனம், சூரிக் பல்கலையுடன் இணைந்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் சொக்லேட் செல்களைப் பயன்படுத்தி சொக்லேட் தயாரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறது.
ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இந்த கொக்கோ தாவர செல்களைப் பயன்படுத்தி சொக்லேட் தயாரிக்கலாம். அந்த செல்கள் உண்மையான சொக்லேட்டின் அதே சுவை மற்றும் கொழுப்புகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |