நாவூறும் சுவையில் தேங்காய் பர்பி.., இலகுவாக செய்வது எப்படி?
தேங்காய் வைத்து செய்யப்படும் அனைத்து இனிப்புகளும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 2
- நெய்- 4 ஸ்பூன்
- வெல்லம்- 2½ கப்
- பால்- ¼ கப்
- பால் பவுடர்- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயை நன்கு துருவி அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் கொரகொரப்பாக அரைத்த தேங்காயை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வறுக்கவும்.
அடுத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்து சேர்த்து மிதமான தீயில் வெள்ளம் கரையும் வரை வதக்கவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பால் மற்றும் பால் பவுடர் சேர்த்து மிதமான தீயில் கெட்டியாக வரும்வரை கலக்கவும்.
பின்னர் இந்த பால் கோவாவை அந்த தேங்காய் வெல்லத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கலந்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து சில மணி நேரம் அப்படியே விட்டு பின் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |