தித்திக்கும் சுவையில் தேங்காய் மிட்டாய்.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த தேங்காய் மிட்டாயை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 3
- சர்க்கரை- 2 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- உலர் திராட்சை- 15
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயை இரண்டாக உடைத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தேங்காயை 20 நிம்டியாம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் தேங்காயை ஓட்டிலிருந்து பிரித்து எடுத்து துருவி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து சூடானதும் நெய் சேர்த்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் இதில் நெய்யில் வறுத்த உலர் திராட்சை சேர்த்து கிளறி ஒரு தட்டி போட்டு சமமாக தட்டி ஆறவிடவும்.
இறுதியாக இதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கினால் சுவையான தேங்காய் மிட்டாய் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |