குழந்தைகள் விரும்பி உண்ணும் தேங்காய் தோசை.., எப்படி செய்வது?
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் தேங்காய் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 கப்
- சாதம்- 1 கப்
- தேங்காய்- 1 கப்
- தேங்காய் தண்ணீர்- 1 கப்
- சர்க்கரை- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, சாதம், தேங்காய் துருவல், தேங்காய் தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 12 மணி நேரம் மூடி போட்டு மாவை புளிக்க வைக்கவும்.
இதற்கடுத்து மாவில் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து சூடானதும் அதில் அரைத்த மாவை தோசை போல் சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |