எப்பொழுதும் இளமையாக இருக்க இந்த ஒரே ஒரு உணவை மட்டும் சாப்பிடுங்கள்
தேங்காய்ப்பூவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய்ப் பூவாக மாறுகிறது.
இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் தேங்காய் பூவில் உள்ளடங்கி இருப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் பூவில் செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை இருப்பதால் அசிடிட்டி, இரைப்பை அழற்சி போன்ற செரிமானம் சார்ந்த நோய்களை குணப்படுத்துகின்றன.
தேங்காய்ப் பூவில் காணப்படும் ஜெலட்டினஸ் என்னும் பொருள் இயற்கையாகவே நீரேற்றத்தை தக்கவைத்து உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது.
தேங்காய்ப் பூவில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் உடலை சோர்வில் இருந்து மீட்டெடுத்து விரைவான ஆற்றலை வழங்குகிறது.
தேங்காய்ப் பூவில் உள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது.
மேலும் உடலில் தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்கவும். ரத்தத்தில் சேரும் கெட்டக்கொழுப்பை கரைக்கவும் தேங்காய்ப்பூ உதவுகின்றது.
தேங்காய் பூ உடலில் உள்ள செல்களை புதுப்பிக்க தூண்டுவதால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.
வளர்சிதை மாற்றங்களுக்கு பிறகு செல்களில் இருந்து கழிவுகள் வெளியேற்றி ல் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படாமல் தடுத்து விரைவாக வயதான தோற்றத்தை பெறாமல் இருக்க செய்கிறது.
மேலும் தேங்காய்ப்பூவில் செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவை பிரகாசப்படுத்த வழிவகுக்கும்.
தேங்காய்ப் பூவை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவி செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |