ஒரு மூடி தேங்காய் இருந்தா போதும்...! சூப்பரான ஐஸ்கிரீம் ரெடி
Healthy Food Recipes
Ice Cream
By Kirthiga
பொதுவாகவே அனைவரும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டுளம் என்று தான் தோன்றும்.
அவ்வாறு தோன்றும் யாரிடாவது எதாவது சாப்பிடலாமா என்றுக் கூறினாலே அவர்கள் உடனே கூறும் பதில் ஐஸ்கிறீம் சாப்பிடலாம் என்று தான்.
காரணம் அதன் சுவை. ஆம்! இந்த ஒரு சுவை அனைவரது நாவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். கோடை காலமோ.. மழை க்காலமோ… ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மட்டும் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை.
ஆகவே அனைவரது வீட்டிலும் பொதுவாக இருக்கும் ஒரு சமையல் பொருளான தேங்காயை வைத்து எப்படி சூப்பரான தேங்காய் ஐஸ்கிறீம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால் - 4 கப்
- தேங்காய் பத்தை - 1 கப்
- சர்க்கரை - 1 கப்
- சோள மாவு - 4 ஸ்பூன்
- பிரெஷ் கிரீம் - 1 கப்
செய்முறை
-
முதலில் ஒரு தேங்காயை உரித்து பத்தையை மட்டும் தனியாக எடுத்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தேங்காய், சோள மாவு மற்றும் 1/2 கப் குளிர்ந்த தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
- பின் ஆழமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை -5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.
-
அடுத்து தேங்காய் பால் மற்றும் சோள மாவு கலவையை பாலுடன் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
- பின் அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும். இதனுடன் மற்ற கலவையும் சேர்த்து, குளிரூட்டியில் வைக்கவும்.
-
கலவையை சுமார் 6-7 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். பின் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
- இறுதியாக அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளை சேர்த்து மீண்டும் குளிரூட்டியில் வைத்து, சுமார் முதல் 6 மணி நேரம் கழித்து எடுத்தால் தேங்காய் ஐஸ்கிரீம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US