நாவூறும் சுவையில் தேங்காய் பால் அல்வா: எப்படி செய்வது?
தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்படும் இனிப்புகள் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைப்பதால் அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும்.
அந்தவகையில் சுவையான தேங்காய்ப்பால் அல்வா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் – 1 கப்
- தேங்காய் பல் – 1 ஸ்பூன்
- முந்திரி – 20
- வெல்லம் - 3/4 கப்
- கார்ன் ஃப்ளோர் – 1 ஸ்பூன்
- நெய் – 1 ஸ்பூன்
- ஏலக்காய்ப்பொடி – 2 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கி, அதில் தேங்காய் பல் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் உள்ள நெய்யில் பிழிந்து எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலை சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால் தேங்காய்ப்பால் கெட்டிப்பட்டு வரும், அந்த தருணத்தில் வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
வெல்லம் சேர்க்கும்போது சற்று இளகிவரும் என்பதால் அப்போது ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளோர் மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்க வேண்டும்.
தொடர்ந்து கிளற அல்வா பதம் கிடைத்துவிடும். வெல்லத்துக்கு பதில், சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
அல்வா பதத்துக்கு திரண்டு வரும்போது அதில் ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி, தேங்காய் அனைத்தையும் தூவி இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |