நாவூறும் சுவையில் தேங்காய் பால் அல்வா: எப்படி செய்வது?
தேங்காய் வைத்து செய்யப்படும் அனைத்து இனிப்புகளும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாத்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைகிறது.
அந்தவகையில், நாவூறும் சுவையில் தேங்காய் பால் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
- அவல்- ¼ கப்
செய்முறை
முதலில் தேங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதன் பின்னர் மிக்ஸி ஜாரில் அவள் சேர்த்து பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தேங்காய் பால் மற்றும் பொடித்த அவல் சேர்த்து கலக்கி நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் அது மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அவல் ஊறவைத்த தேங்காய் பால் மற்றும் வெல்லம் பாகு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கெட்டியாகி வந்ததும் இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |