நாவூறும் சுவையில் தேங்காய்ப்பால் குஸ்கா.., இலகுவாக செய்வது எப்படி?
பிரியாணி சுவையில் இருக்கும் இந்த சுவையான தேங்காய்ப்பால் குஸ்கா மிகவும் பிரபலமானது.
அந்தவகையில், நாவூறும் சுவையில் தேங்காய்ப்பால் குஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி- 1kg
- தேங்காய்- 1
- வெங்காயம்- 150g
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50g
- பச்சைமிளகாய்- 50g
- சீரகம்- 1 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- ஏலக்காய்- 3
- நட்சத்திர பூ- 1
- ஜாவித்திரி பூ- 2
- கிராம்பு- 4
- முந்திரி- 50g
- உலர் திராட்சை- 25g
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி, கிராம்பு, பட்டை, ஏலக்காய், ஜாவித்திரி பூ, சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் பச்சைமிளகாய் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் ஒரு கப் அரிசிக்கு 1½ கப் அளவிற்கு தேங்காய் பால் ஊற்றி பின் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
இதற்கடுத்து தேங்காய் பால் நன்கு கொதித்து வந்ததும் இதில் கழுவி கால் மணி நேரம் ஊறவைத்த அரிசி சேர்த்து வேகவைக்கவும்.
அரிசி நன்கு 90% வெந்து வந்ததும் இதில் உலர் திராட்சை, கொத்தமல்லி இலை சேர்த்து 15 நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் குஸ்கா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |