தங்கம் போல் முகம் ஜொலிக்க இயற்கை மாய்ஸ்சரைசர்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த தேங்காயை பயன்படுத்தி ஏராளமான சத்துக்கள் பெறவும் , சரும அழகை மேம்படுத்த முடியும்.
தேங்காய் பால் நம் சரும ஆரோக்கியத்திலும் கூந்தல் ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் தேங்காய் பாலைக் கொண்டு மாய்ஸ்சரைசர் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- ½ கப்
- கிளிசரின்- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
- ரோஸ்மேரி எண்ணெய்- 5 சொட்டு
தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
இதனுடன் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும்.
இதில் ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இதை ஒரு கொள்கலனில் மாற்றி குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்வித்து பிறகு இதை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வரலாம்.
தேங்காய் பாலை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வர சருமத்தை மென்மையாக உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |