வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் தேங்காய் பால்: எப்படி பயன்படுத்துவது?
உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 5 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
- கற்பூர பொடி- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், தயிர் மற்றும் கற்பூர பொடி சேர்த்து ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் நன்றாகப் தடவவும்.
இறுதியாக ஒரு மணி நேரம் அப்படியே வைத்து, மென்மையான ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலசவும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 4 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்துகொள்ளவும்.
பின் இதனை மிதமான தீயில் வைத்து சூடுசெய்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை உச்சந்தலையில் மற்றும் முடியில் நன்கு தடவி அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர், ஒரு மணி நேரம் கழித்து, மென்மையான ஷாம்பு கொண்டு முடியை கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |