Hair Mask For Growth: முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் மாற்றலாம்
முடி உதிர்வைக் குறைக்க விலையுயர்ந்த முடி சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறீர்களா? முடி கொட்டுவதால் உங்கள் தலைமுடியின் நீளம் குறைகிறதா?
முடியை நீளமாக்குவதற்கான அனைத்து தீர்வுகளும் தோல்வியுற்றதா? அப்படியானால், நீங்கள் இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தி பார்க்கலாம்.
எல்லாப் பெண்களும் முடி உதிர்வால் அடிக்கடி சிரமப்படுகின்றார்கள். முடி உதிர்வதால், நீண்ட கூந்தல் பற்றிய கனவு பெரும்பாலும் நிறைவேறாமல் செல்கிறது. முடி உதிர்வைக் குறைக்க, சரியான முடி பராமரிப்புடன், பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தலைமுடி உதிர்வது, வலுவிழந்து, முடி வளர்ச்சி நின்றுவிட்டால், இந்த ஹேர் மாஸ்க் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது முடியை வலுவாகவும் நீளமாகவும் மாற்றும்.
இந்த ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
தேவையானவை
-
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- வேப்ப இலை - 5-7
- கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி
- தேயிலை மர எண்ணெய் - 8-10 சொட்டுகள்
செய்முறை
- முதலில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
- பின் இதை உங்களது உச்சந்தலையில் தடவி, 1 மணி நேரத்திற்கு அப்படியே விடவும்.
- 1 மணி நேரம் கழித்து, உங்களது தலையை சுத்தமான நீர்க் கொண்டு நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களது முடி வளர்ச்சி மேன்மேலும் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் எண்ணெய் சேதமடைந்த முடியை ஈரப்பதமாக்க உதவி செய்யும். இது பொடுகு மற்றும் பிற உச்சந்தலையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். தேங்காய் எண்ணெயில் அதிக ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றாலும், பயன்படுத்தும்போது குறிப்பிட்ட பலன்களை வழங்கும்.
வேப்ப இலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
வேம்பு என்பது பொதுவாக உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு நன்மையை வழங்கும்.
அத்துடன் தலையில் சிவத்தல், அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிற முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராகவும் போராடும்.
கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
காயங்கள், முகப்பரு மற்றும் தீக்காயங்கள் போன்ற பல தோல் பிரச்சனைகளுக்கு கற்றாழை உதவுகிறது.
குடல் அழற்சி, நீரிழிவு நோய், ஹெபடைடிஸ் மற்றும் பலவற்றிற்கு நன்மையை வழங்குகிறது.
முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடைவதைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தேயிலை மர எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
முடிக்கு தேயிலை மர எண்ணெய் பல நன்மைகயை வழங்குகிறது.
ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
தேயிலை மர எண்ணெயில் பொடுகை உண்டாக்கும் ஈஸ்டை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது, எனவே இது தலையில் பொடுகு வராமல் இருப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் உங்களது முடி வளர்ச்சிக்கு உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |