வெறும் 10 நிமிடத்தில் சுவையான தேங்காய் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?
எப்போதும் போல் தோசை மற்றும் இட்லிக்கு சாம்பார் வைத்து தான் சாப்பிட்டு வருகின்றீர்கள்.
வீட்டில் எப்போதும் ஒரு மாதிரியே கறி வைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக இதை செய்து சாப்பிட்டு பார்த்தால் நல்லது.
அந்தவகையில் தேங்காய் வேர்க்கடலை வைத்து எப்படி சுவையான சட்னி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 5 தேக்கரண்டி
- வேர்க்கடலை - 1 கப்
- பச்சை மிளகாய் - 10
- பூண்டு பற்கள் - 4
- புளி தண்ணீர்
- பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
- துருவிய தேங்காய் - 1 கப்
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 1 தேக்கரண்டி
- பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
செய்முறை
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
2. வேர்க்கடலை வறுபட்டதும், பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3. பூண்டு சேர்க்கவும். நான்கு துண்டு புளி சேர்க்கவும்.
4. வறுத்த பொருட்களை ஆற விடவும்.
5. ஒரு மிக்ஸ்ர் ஜார்க்கு மாற்றி, பொட்டுக்கடலை, துருவிய தேங்காய், கல்லு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
6. பாதி அரைபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
7. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
8. சுவையான வேர்க்கடலை சட்னி சூடான இட்லி அல்லது தோசை உடன் பரிமாற தயாராக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |