தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி.., எப்படி செய்வது?
போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 250g
- உப்பு- 1 சிட்டிகை
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- நல்லெண்ணெய்- 100ml
- வெல்லம்- 75g
- தேங்காய்- 1
- ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
- சுக்கு தூள்- 1 சிட்டிகை
- நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிணைந்துகொள்ளவும்.
பின் ஒரு வாணலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும்.

அடுத்து இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சுக்கு தூள், உப்பு சேர்த்து வதக்கி கெட்டியாகி வந்ததும் இதனை ஆறவைக்கவும்.
இதனைதொடர்ந்து பிணைந்து வைத்து மாவை உருண்டையாக உருட்டி அதனுள் வெல்லப்பாகில் வதக்கிய தேங்காயை வைத்து வட்டமாக தேய்க்கவும்.
பின்னர் இதை தவாவில் மிதமான தீயில் நெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் போளி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |