தித்திக்கும் சுவையில் தேங்காய் புட்டிங்.., எப்படி செய்வது?
புடிங் என்றால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1
- சோள மாவு - 3 ஸ்பூன்
- கன்டென்ஸ்டு மில்க்- 200g
செய்முறை
முதலில் தேங்காயை துருவி மிக்ஸ்ர் ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு துணியில் வடிகட்டி பிழிந்து கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து இதில் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் ஒரு வாணலில் தேங்காய் பால் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும்.
தொடர்ந்து இதில் சோள மாவு கலவையை சேர்த்து கிளறி கெட்டியாகி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஆறியதும் பிரிட்ஜில் 8 மணி நேரம் வைத்து எடுத்தால் தேங்காய் புட்டிங் ரெடி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |