நாவூரும் சுவையில் தேங்காய் லட்டு 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக இருப்பது லட்டு.
தேங்காய் எப்போதும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொளாகும். நீங்கள் புதிய சுவையில் ஓர் லட்டு செய்யலாம் என நினைக்கின்றீர்கள் என்றால், இந்த தேங்காய் லட்டு செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்
- முந்திரி - 2 மேசைக்கரண்டி
- திராட்சை
- ரவை - 2 கப் (250 மி.லி)
- துருவிய தேங்காய் - 2 கப்
- சர்க்கரை - 3/4 கப்
- காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்க்கவும். முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் திராட்சையும் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
2. ஒரு அகலமான கடாயில் நெய் சேர்த்து ரவை சேர்க்கவும். ரவையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
3. அதே கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
4. தேங்காயில் உள்ள ஈரம் எல்லாம் போய் நிறம் மாறிய பிறகு, வறுத்த ரவையை சேர்த்து, தீயைக் குறைத்து வைத்து நன்றாகக் கலக்கவும்.
5. அடுத்து சர்க்கரையை எடுத்து சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
6. 2-3 நிமிடங்களுக்குப் பிறகு காய்ச்சி ஆறிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
7. கடைசியாக நெய், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
8. ரவா தேங்காய் கலவையை ஒரு தட்டில் மாற்றவும்.
9. உள்ளங்கையில் சிறிது நெய் தடவி, லட்டு கலவை சற்று சூடாக இருக்கும் போது, கலவையின் ஒரு பகுதியை எடுத்து விரும்பிய வடிவத்தை பிடித்து, அதே முறையில் மீதமுள்ள கலவையையும் செய்து எடுத்தால் சுவையான லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |