இளநீர் குடிப்பது நல்லதே! ஆனா இவங்க மட்டும் குடிக்க வேணாம்... இவ்ளோ தீமைகளா?
இளநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக உடல் சூட்டிற்கு இளநீர் அதிமருந்தாக செயல்படுகிறது.
பல்வேறு நன்மைகளை கொடுக்கும் இளநீர் தீமைகளையும் கொடுக்கிறது.
இளநீரில் அதிகளவு எலக்ட்ரோலைட்ஸ்களான பொட்டாசியம், கார்போஹைடிரேட், சோடியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. எனவே இது உடலில் உள்ள நீரின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் சில மருத்துவர்கள் இவை முழுமையாக ஹைடிரேஷன்க்கு உதவுவதில்லை என்று கூறுகிறார்கள்.
இளநீர் அதிகளவில் உட்கொள்வது நம்மை கழிப்பறையை நோக்கி அதிக முறை ஓட வைக்கும். அதாவது அதிகம் சிறுநீர் கழிக்க வைக்கும், இளநீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதன்படி அதிகபடியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்கள் உழைப்பின் தேவை அதிகமாக உள்ளது, இது தொடர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என நினைத்து மற்ற பழச்சாறுகளுக்கு மாற்றாக இதை பலரும் குடிக்கின்றனர். ஆனால் ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இளநீர் தினமும் குடிக்க கூடாது.
அமெரிக்க விவசாயத் துறையின் கூற்றுப்படி, ஒரு கப் புதிய தேங்காய் நீரில் 252 மில்லிகிராம் சோடியம் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது, ஆனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி முடிந்தவுடன் இளநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது அவர்கள் உடலுக்கு போதுமான ஆற்றலை தருகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் சாதாரண தண்ணீர் கொண்டிருக்கும் நீரேற்ற பண்புகள் இளநீரில் இல்லை. இதில் உள்ள கார்போஹைடிரேட்க்காக வேண்டுமென்றால் இதனை குடிக்கலாம். இன்னும் சிலர் நீரின் அளவை அதிகரிக்க உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் இளநீரை குடிக்கிறார்கள், இது மிகவும் தவறானது.
இளநீர் உங்களுடைய இரத்த அழுத்தத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே அறுவைசிகிச்சையின் போதோ அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகோ இளநீர் குடிப்பதை நிறுத்தி வைக்கவும்.
கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் இளநீர் அதிகமாக குடிப்பது பாதுகாப்பானதல்ல. அதிகளவு இளநீர் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முடிந்தளவு இளநீரிடம் இருந்து விலகி இருங்கள்.