பல ஆயிரம் கோடி கடனால் தற்கொலை செய்த கணவர்! ஒரே ஆண்டில் மாற்றத்தை கொண்டு வந்த காபி டே CEO மாளவிகா
பெரியளவில் கடனில் திணறி கொண்டிருந்த காபி டே நிறுவனத்தை ஒரே ஆண்டில் தனது திறமையான நிர்வாகத்தின் மூலம் அதன் சி.இ.ஓ மாளவிகா மீட்டுள்ளார்.
கஃபே காபி டே சி.இ.ஓ வாக இருந்தவர் வீரப்பா கங்கையா சித்தார்த்தா ஹெட்ஜ். கடந்த 2019ல் சித்தார்த்தா கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கழுத்தை நெறிக்கும் கடன், வெளி அழுத்தம் என பல்வேறு காரணங்களால் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். காபி டே நிறுவனர் சித்தார்த்தின் நிறுவனத்துக்கு 7200 கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில் 2020ல் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.
இந்தியா முழுவதிலும் பல்வேறு கிளைகளை கொண்ட காபி டேவை மாளவிகா எப்படி நிர்வாகிப்பார் என பெரும் கேள்வி எழுந்தது. தனது அசாத்திய உழைப்பால் நிறுவனத்தின் கடனை பாதியாக குறைத்த மாளவிகா 7,200 கோடியில் இருந்து ரூ.3,100 கோடி ரூபாயாக ஆக்கியுள்ளார்.
அதன்படி காபி டே நிறுவனத்தின் கடன்களை நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத்தும் என தெரிவித்த மாளவிகா தனது வார்த்தையைக் காப்பாற்றியுள்ளார். மாளவிகா ஏற்படுத்திய மாற்றம் ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எனது கணவரின் கனவுகளை நனவாக்க பாடுபடுவேன் என மாளவிகா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார், அது உண்மையாகவும் மாற தொடங்கியுள்ளது.