நரைமுடி பிரச்னையை குணமாக்க காபி பவுடரை இப்படி யூஸ் பண்ணுங்க
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே காபி பவுடரை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- காபி பவுடர்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
காபி பவுடர், தேன், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த பேஸ்ட்டை வேர்கள் முதல் நுனி வரை உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும்.
பின்னர், ஒரு ஷவர் கேப் போட்டு 20-30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை நன்றாக அலச வேண்டும்.
காபி, தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் கலவையானது உங்கள் தலைமுடியினுள் ஆழமாக ஊடுருவி வேலை செய்கிறது.
இதனால், மென்மையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி, நரைமுடி பிரச்னையை குணமாக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |