5 ருபாய் போதும்.. முகத்தின் கருமையை நீக்கி பளபளப்பாக்கும் ஒரு அருமையான Face mask தயார்
சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க தான் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
முகத்தை பொலிவாக்க விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த 5 ருபாய் காபி பொடி போதும்.
முகம் பளபளக்க காபி பொடி
பொதுவாக காபி புத்துணர்ச்சிக்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் பெரிதளவில் உதவுகிறது. காபி பவுடரை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் கொலாஜன் அளவை சீராக்குகிறது.
இதனால் சருமம் தளராமல் இருக்கவும், இளமையாக இருக்கவும், அதோடு சருமத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவு தரவும் உதவுகிறது.
முதலில் காபி பவுடர் மற்றும் பச்சை பாலை சேர்த்து முகத்திற்கு தடவி 15 நிமிடம் பிறகு கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் முகத்தில் உருவாகும் எண்ணெயை நீக்கிவிடும்.
அடுத்ததாக ஒரு பவுலில் காபி தூள், தயிர், மஞ்சள் தூள் சேர்த்து முகம் கை கால்களுக்கு தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் தோள்கள் கருமை நிறம் நீங்கி வெள்ளையாக மாறும்.
மேலும் சன் டேன், முகத்தில் நிறம் மாறுபாடு, கழுத்து கருமை போன்ற பிரச்சினை உள்ளவர்கள் காபி பொடியுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
சருமத்தில் அழற்சி, அரிப்பு மற்றும் தடிப்புகள் இருந்தால் காபி பொடியை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |