கோயில் நன்கொடையாக 20 சவரன் தங்க கிரீடம்! அள்ளிக் கொடுத்த கோயம்புத்தூர் தம்பதிகள்
கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் 20 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
சித்திரை 1 ஆன தமிழ் புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல கேரளாவில் உள்ள மலையாள மக்களும் புத்தாண்டு தினமான விஷூவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் தம்பதிகள்
விஷூ தினமான நேற்று கேரளாவில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அங்கு வரும் பக்தர்கள் பலவிதமான காணிக்கைகளையும் கொடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய குருவாயூர் கோவில் மூலஸ்தான அதிபதியான குருவாயூரப்பனுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் காணிக்கை வழங்கியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் கிரிஜா ஜோடி தம்பதியினர் சுமார் 20 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
சுமார் 160.350 கிராம் எடையிருக்கும் தங்க கிரீடம் நேற்று தீபாராதனைக்கு பிறகு குருவாயூரப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. இந்த கிரீடத்தின் மதிப்பு சுமார் 13 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு குருவாயூர் கோவிலுக்கு சுமார் 14 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலின் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |