ஐபிஎல் 2026 - முதல் 4 போட்டிகளிலும் ஒரே நிகழ்வு நடந்த அதிசயம்
2026 ஐபிஎல் தொடர், மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி மே 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
6 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், முதல் 4 போட்டிகளில் ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது இணையத்தில் விவாதமாகியுள்ளது.
முதல் 4 போட்டிகளிலும் ஒரே நிகழ்வு
முதல் 4 போட்டிகளிலும், சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே நாணய சுழற்சியில் வென்றுள்ளது.

4 போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்ற அணித்தலைவர்கள் முதலில் பந்து வீச்சையை தேர்வு செய்துள்ளனர்.
4 போட்டிகளிலும், சொந்த மைதானத்தில் விளையாடிய, முதலில் பந்து வீசியே அணியே வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டிகளில் பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் வெற்றியும், ஐதராபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தோல்வியும் அடைந்துள்ளன.
பொதுவாக கிரிக்கெட்டில், ஒவ்வொரு போட்டியிலும் ஆடுகளத்தின் தன்மை, அணியின் செயல்பாடு ஆகியவை மாறுபடும்.
ஆனால் தொடர்ச்சியாக முதல் 4 போட்டிகளிலும் 3 நிகழ்வுகள் ஒன்றாக அமைந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இன்று சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணி, பஞ்சாப் கிங்ஸ்(PBKS) அணியை எதிர்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |