இந்திய கிரிப்டோ தளத்தில் மாயமான ரூ. 378 கோடி - நிதியை மீட்க உதவினால் 94 கோடி பரிசு
மாயமான ரூ. 378 கோடியை மீட்க உதவுபவருக்கு ரூ.94 கோடி வரை வழங்கப்படும் என CoinDCX நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனோவிற்கு பின்னர், உலகளவில் கிரிப்டோ முதலீடுகளின் மீதான ஆற்வம் மக்களிடையே அதிகரிட்டுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ள நிலையிலும், மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிரிப்டோ தளத்தில் ஹேக்
CoinDCX இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பரிமாற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் கடும் பாதுகாப்புகளை மீறி, 44 மில்லியன் டொலரை(இந்திய மதிப்பில் ரூ. 378 கோடி) ஹேக்கர்கள் இந்த தளத்தில் இருந்து திருடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள CoinDCX தலைமை செயல் அதிகாரி சுமித் குப்தா, "முதலீட்டாளர்களின் நிதி பாதுகாப்பாக உள்ளது.
Since yesterday the CoinDCX team has been working around the clock and we have published the First Incident Report on the July 19th server breach. The report covers all the key points:
— Sumit Gupta (CoinDCX) (@smtgpt) July 20, 2025
-Customer funds are 100% safe. All user assets are stored in segregated cold wallets.
-The… https://t.co/Ouuplc521Q
நிறுவனத்தின் செயல்பட்டு கணக்கு ஒன்று தான் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் முதலீட்டாளர்களின் கிரிப்டோ எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்தால் முதலீட்டாளர்கள் பயந்து தங்கள் கிரிப்டோ முதலீடுகளை விற்க வேண்டாம். அது விலை சரிவுக்குக் காரணமாக அமைந்து இழப்புகளை ஏற்படுத்தும். ஹேக் செய்யப்பட்ட நிதியை மீட்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
பவுண்டி திட்டம்
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட நிதியை மீட்பதற்கான பவுண்டி திட்டத்தை அறிவித்துள்ளனர்.
Cybercrime is an attack on trust. And when one of us is targeted, all of us feel it. At @CoinDCX, we’re committed to fighting back against the attackers. Hence, I am announcing our Recovery Bounty Program.
— Neeraj Khandelwal (@neerajKh_) July 21, 2025
Up to 25% of any recovered funds will be awarded to individuals or teams… pic.twitter.com/YBXLF0C4Gj
இதன்படி, இந்த ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோவை மீட்டெடுக்கும் செயலில் பங்குவகிக்கும் மற்றும் தாக்குபவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதில் உதவுபவர்களுக்கு மீட்டெடுக்கப்பட்ட நிதியில் இருந்து 25 சதவீதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு தொகையும் மீட்டெடுக்கப்பட்டால், 11 மில்லியன் டொலர் வரை(இந்திய மதிப்பில் ரூ.94.91 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |