சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ! எப்படி செய்வது தெரியுமா?
கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம்.
இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
- கற்பூரவள்ளி இலை – 5 டீ தூள் – 1 tsp
- தேன் – தே.அ தண்ணீர் – 2 கப்
- எலுமிச்சை சாறு – 1 tsp
- இஞ்சி – 1/2 துண்டு
- மிளகு – 4 ஏலக்காய் – 1
செய்முறை
கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் டீ தூளை போட்டு கொதிக்க வையுங்கள். பின்பு அதில் கற்பூரவள்ளி இலையையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
பின்பு இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி அதில் போடுங்கள். அதன்பின்னர் ஏலக்காயை இடித்து அதில் போடுங்கள்.
நன்கு கொதித்த பின்னால் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு டீ கோப்பையில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து குடியுங்கள்.
மாலை வேளையில் இதனை தயார்செய்து குடித்து பயனடையுங்கள்.