அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்துதா? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்
மழை காலம், வெயில் காலம் என எல்லா காலத்திலும் சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம் பாடாய் படுத்தும்.
ஜலதோஷம் வந்தாலே சிலர் ஆண்டிபயாடிக் மாத்திரகளை தேடுவார்கள். ஆனால் இது உடல்நலத்திற்கு நல்லதல்ல, ஜலதோஷத்தில் இருந்து விடுபட இயற்கை வழிகள் உள்ளது.
ஜலதோஷ நேரத்தில் மிளகு ரசம் ஒரு கப் குடித்து வரலாம். தினமும் சூடான ரசம் ஒரு கப் குடிப்பது நல்லது.
பூண்டு , இஞ்சி, மீன் உணவு முதலியவை மூக்கு அடைப்பை அகற்றி விடும்.
அசைவ உணவுக் காரர்கள் மூக்கு அடைப்பை எளிதில் சரி செய்து கொள்ளலாம். மிளகு , வெள்ளைப்பூண்டு சேர்த்த தயாரித்த கோழியில் சூப் செய்து ஒரு கப் வாரம் இருமுறை அருந்தினால் ஜலதோஷமும், சைனஸும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தினமும் வெந்நீர் அல்லது நீராவிக் குளியல் நல்லது. சுட வைத்த குடிநீர் மூலமும் மூக்கடைப்பு, ஜலதோஷத்தை தவிர்க்க முடியும்.
தொடர்ச்சியாக இப்படி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால் ஜலதோஷத்துக்கு குட்பை சொல்லி விடலாம்.