சளி பிடித்தால் கொரோனா வருவதைத் தடுக்கலாம்! புதிய ஆய்வில் தெரியவந்த உண்மை
சாதாரண ஜலதோஷ வைரஸிலிருந்து உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி கொரோனாவுக்கு எதிராக பாதுகாக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ரைனோ வைரகள் ஜலதோஷத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை மக்களில் காணப்படும் மிகவும் பரவலான சுவாச வைரஸ்கள் ஆகும்.
Glasgow-வில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ரைனோ வைரஸ் உருவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி சுவாசக் குழாயின் உயிரணுக்களில் கொரோனா பரவுதை தடுக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக ஆய்வுகளின் ஒரு பகுதியாக, விஞ்ஞானிகள் கணித உருவகப்படுத்துதல்களை நடத்தினர். அது ரைனோ வைரஸின் பரவலானது புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறது.
லேசான, பொதுவான ஜலதோஷ வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோயெதிர்ப்பு சக்தி கொரோனாவுக்கு எதிராக ஓரளவு நிலையற்ற பாதுகாப்பை வழங்கக்கூடும், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் மற்றும் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் என எம்.ஆர்.சி-Glasgow பல்கலைக்கழக வைரஸ் ஆராய்ச்சிக்கான பேராசிரியர் Pablo Murcia தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக, இந்த ரைனோ வைரஸ்- கொரோனா வைரஸ் தொடர்புகளின் போது மூலக்கூறு மட்டத்தில் என்ன நடக்கிறது மற்றும் , நோய் பரவுவதில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி கண்டறியவுள்ளதாக Pablo Murcia தெரிவித்துள்ளார்.