ரூ 871 கோடிக்கு நிறுவனத்தை விற்றவர்... அதை மட்டும் வாங்க முடியவில்லை என குமுறல்
பல வெற்றிகரமான தொழில்முனைவோர் 30 வயதிற்கு முன்பே கோடீஸ்வரர்களாகிவிடுகின்றனர்.
சுமார் 871 கோடிக்கு விற்பனை
சிலர் கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டு வணிக உலகத்தைத் தெரிவு செய்கின்றனர். அப்படியான ஒருவர் ஜேக் காசன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள MVMT கடிகாரங்களின் நிறுவனர்.
தனது 27 வயதிலேயே 2018ல் காசன் கோடீஸ்வரர் அந்தஸ்தைப் பெற்றிருந்தார். ஆனால், அதன் பின்னர் அவர் எடுத்த முடிவு, அவரது வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. Movado குழுமத்திற்கு தமது நிறுவனத்தை, இன்றைய மதிப்பில் சுமார் 871 கோடிக்கு விற்பனை செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் சமீபத்தில் வெளிப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பெரும் பணக்காரனாக மாறியதன் பின்னர் வாழ்க்கையில் தனது நோக்கத்தை இழந்து பதட்டம் மற்றும் மனச்சோர்வின் பிடியில் சிக்கியதாக குறிப்பிட்டார்.
சர்வதேச செய்தி ஊடகம் ஒன்றில் கலந்துரையாடிய காசன், பல வருடங்களில் முதல் முறையாக... அந்த தொழில்முனைவோர் பயணத்தைப் போல முக்கியமானதாக உணர்ந்த எதையும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மன அமைதியை மட்டும்
சொந்த நிறுவனத்தை விற்பனை செய்ததன் பின்னர் உண்மையில் உளவியல் பாதிப்புக்கு இலக்கானதாக வெளிப்படையாக பதிவு செய்தார். பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தும் மன அமைதியை மட்டும் தம்மால் வாங்க முடியாமல் போனது என்றார்.
கல்லூரி பரிப்பௌ பாதியில் கைவிட்டவர் என்றாலும், தற்போது பல புதிய நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது 33 வயதாகும் காசன் வாழ்க்கையில் தமது நோக்கம் என்ன என்பதை கண்டறிய உழைத்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |