தோழி கொடுத்த பொருள்..உட்கொண்ட மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்! கதறும் பெற்றோர்
சென்னையில் போதை மாத்திரை உட்கொண்டதால் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த சாம்யுவராஜ் என்பவரது மகள் ரூத்பிரின்சி. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 8ஆம் திகதி கல்லூரியில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்துள்ளார். சாதாரண மயக்கம் என்று நினைத்து விட்டுவிட்டனர். ஆனால் சோர்வாக இருந்த அவர் மீண்டும் மயக்கமடைந்துள்ளார்.
இதனால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூத்பிரின்சிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி ரூத்பிரின்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரூத்பிரின்சி உயிரிழப்பதற்கு முன்பு தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார்.
சக மாணவி ஒருவர் அளித்த போதை மாத்திரையை உட்கொண்டதாகவும், அதன் பிறகே தனக்கு மயக்கம், சோர்வு, தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். ரூத்பிரின்சியின் உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அதன் பின்னர் அவரது உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் நிலுவையில் உள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ரூத்பிரின்சியின் இதுதொடர்பாக பொலிசில் புகார் அளித்தனர். மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, தங்கள் கல்லூரியில் யாரும் போதை மாத்திரையை உட்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.